குடிபோதையில் மனைவியுடன் தகராறு... 3 மாத குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கொடூரன்
மனைவியுடன் நடந்த தகராறில் 3 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக அடித்துக்கொன்று கை கால்களை நசுக்கி பிய்த்து தரையில் அடித்து கொன்றுள்ளான், அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொல்கத்தா: கணவன் மனைவி தகராறில் பச்சிளம் பிள்ளை என்ன செய்யும். குடிபோதையில் மனைவியுடன் சண்டை போட்ட ஒருவன், குரங்கு கையில் பூமாலையாக 3 மாத பச்சிளம் பிஞ்சு குழந்தையை தடையில் அடித்து பிய்த்து எரிந்து கொலை செய்திருக்கிறான்.
அந்த கொடூர நபரின் பெயர் ராஜூ என்பதாகும். இன்று காலையிலேயே போதையில் வந்த அவன் மனைவி அப்சாரியை வம்புக்கு இழுத்தான். மனைவியும் சூடாக பதிலுக்கு பதில் பேசினாள். போதையில் இருந்த அவனை மேலும் உசுப்பேற்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் பாத்திரங்களை தள்ளி விட்டான். மனைவியை திட்டினான்.

கணவன் மனைவி சண்டை பலமாக நடந்து கொண்டிருந்த போதும் எதுவும் தெரியாமல் அவர்களின் மூன்று மாத குழந்தை படுக்கையில் கை கால்களை அசைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ராஜூ பயங்க கோபத்தோடு குழந்தையின் கால்களை பிடித்து தூக்கினான்.
என்ன நடக்கிறது என்பதை அப்சாரி உணரும் முன்னே அந்த குழந்தையை கீழே வீசினான் இதில் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக துடி துடித்து அடங்கியது. பதறிப்போன அப்சாரி உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள். கூடவே மாமியாரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடந்த சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் கூறவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பெண் குழந்தை பிறந்ததில் இருந்த ராஜூவிற்கு சந்தோசமில்லை. மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருப்பானாம். இன்றும் அப்படித்தான் சண்டை அதிகமாகவே குழந்தையை கீழே வீசி கொன்று விட்டான்.
என்னதான் பெண் குழந்தையாக இருந்தாலும் அதை கொடூரமாக கொல்வதற்கு எப்படித்தான் மனது வந்தாதோ. வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications