வெறுங்கையுடன் தீவிரவாதிகளை துரத்தி ஒருவனை கொன்று வீரமரணம் அடைந்த ஹவில்தார் ஜகதீஷ்
சிம்லா: பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் பலியான பதுகாப்பு படை வீரர்களில் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹவில்தார் ஜகதீஷும் ஒருவர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹவில்தார் ஜகதீஷும் ஒருவர்.
இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீ்ஷ் சந்த்(48). கடந்த 2009ம் ஆண்டு டோக்ரா ரெஜிமென்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீர்ல மாநிலம் லேவில் பணியாற்றிய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பதன்கோட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10 நாட்கள் விடுமுறையில் கிராமத்திற்கு சென்றிருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை தான் பணிக்கு திரும்பியுள்ளார். திருமணமான அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சனிக்கிழமை காலை ஜகதீஷ் உள்பட சில ஜவான்கள் சமையல் அறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
சமையல் அறையில் வெளிச்சம் தெரிவதை பார்த்த தீவிரவாதிகள் அந்த பக்கம் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது ஜகதீஷ் வெளியே ஓடி வந்து வெறுங்கையுடன் தீவிரவாதிகளை துரத்திச் சென்றுள்ளார்.
அதில் ஒரு தீவிரவாதியை பிடித்து அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து அவரை ஜகதீஷ் சுட்டுக் கொன்றுள்ளார். இதை பார்த்த பிற தீவிரவாதிகள் ஜகதீஷை சுட்டுக் கொன்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications