5 காசுக்காக நடத்தப்பட்ட வழக்கின் செலவு ரூ. 47,795
டெல்லி: கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவரிடம் ஐந்து பைசா குறைவாக டிக்கெட் பணம் வாங்கியதாக நடத்துனர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் செலவு தற்போது நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக டெல்லி போக்குவர்த்து கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 1973ம் ஆண்டு டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துனர் ரன்பீர் சிங் என்பவர் பயணி ஒருவரிடம் 15 காசு மதிப்புள்ள டிக்கெட்டிற்கு 10 காசு மட்டுமே பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 1976ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரன்பீர். இதற்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது.

உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் ரன்பீருக்கும் சாதகமான தீர்ப்பே கிடைத்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டி.டி.சி. சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை வரும் ஜனவரி 19ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செலவிடப்பட்ட தொகை குறித்து விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த டி.டி.சி. இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை ரூ. 47,795 செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications