மேட்டரை கேட்டால் ஷாக்காயிடுவீங்க.. ஜஸ்ட் கொஞ்ச நேரம் தான்.. டைவர்ஸ் தந்த கணவன்..!
வேட்பு மனு விவகாரத்தில் விவாகரத்து வரை தம்பதி சென்றுள்ளனர்
கொல்கத்தா: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்களே.. ஆனால் விவாகரத்து கூட நடக்கும் போலயே.. அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்து, கணவனும், மனைவியும் ஒரு மாநிலத்துக்கே ஷாக் தந்துள்ளனர்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை என்பது மறுபடியும் உண்மையாகிவிட்டது.. நாளுக்குநாள் எகிறும் அரசியல் ஆசையில், பல குடும்பங்களுக்குள்ளும் பஞ்சாயத்துக்கள் வெடித்து வருகின்றன
இந்தியாவின் மிக பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சரோஜினி நகர் தொகுதி உள்ளது.. இங்கு போட்டியிட இப்போதைய சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் ஸ்வாதி சிங்கும் அவரது கணவர் தயாசங்கர் சிங் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தனர்.

பேனர்கள்
இருவருமே பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2017ல் பாஜகவில் இணைந்தவர்கள் ஆவர்.. ஸ்வாதி சிங் அமைச்சராக இருக்கிறார்.. ஆனால், இதே தொகுதியை தம்பதி இருவருமே கேட்டனர்.. இந்த விவகாரத்தினால் தம்பதி இருவருமே பிரிந்து வாழும் சூழலும் ஏற்பட்டுவிட்டது. ஸ்வாதி சிங், முன்கூட்டியே அந்த தொகுதி தனக்குதான் கிடைக்க வேண்டும் என்ற ரீதியில், அங்கே பிரச்சாரத்திற்கான பேனர்களை ஒருமாதத்துக்கு முன்பே தயாராக வைத்துவிட்டார்..

மனைவி
இதை பார்த்தும் கணவர் தன் முடிவை மாற்றி கொள்ளவில்லை.. சரோஜினி தொகுதியில்தான் போட்டியிடுவேன் என்று ஒற்றைக்காலில் நின்றார்.. "கடந்த முறை நான் என் மனைவியை போட்டியிட செய்தேன்.. அதனால் இந்த முறை நான்தான் போட்டியிடுவேன்" என்று கறாராக சொன்னார்.. இந்த தம்பதி பிரச்சனையால் பாஜக குழம்பி போய்விட்டது.. ஆனாலும் தம்பதி பிரிந்தே விட்டனர்..

டம் டம்
அதுபோலவே ஒரு பிரச்சனை மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.. இங்குள்ள தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் 9-வது வார்டில் போட்டியிட சுர்ஜித்ராய் சவுத்ரி என்பவர் விருப்பமனு செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதில், மனைவி ரீட்டா ராய் சவுத்ரிதாசுக்கு சீட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.. வேட்பாளர் லிஸ்ட் வெளியான அடுத்த சில மணி நேரத்தில் அந்த வார்டில் தும்பாதாஸ் கோஷ் என்பவருக்கு 9-வது வார்டு ஒதுக்கப்பட்டது...

நிராகரிப்பு
இதை சரிகட்டும் வகையில் சுர்ஜித் ராய் சவுத்ரிக்கு 10-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.. இதனால் 9-வது வார்டில் ரீட்டா ராய் சவுத்ரிதாசை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் வலியுறுத்தியது. அவரது கணவரும், கட்சி தொண்டர்களும் போட்டியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தினார்கள்.. ஆனால் கணவர் வேண்டுகோளை மனைவி நிராகரித்தார்... கட்சி சீட் கொடுக்காவிட்டாலும் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

டைவர்ஸ்
இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை உருவாகிவிட்டது.. இப்போது மனைவிக்கு டைவர்ஸ் நோட்டீசு அனுப்பிவிட்டாராம் கணவர்.. மனைவியிடம், அந்த வீட்டை விட்டு வெளியேறி, அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். இதை பற்றி ராய் சவுத்ரி சொல்லும்போது, "கட்சியை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. இதனால் என் அரசியல் வாழ்க்கையே பறிபோய்விடும். இதை கருத்தில் கொண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன்" என்றார்..

தம்பதி
இதுபற்றி மனைவி சொல்லும்போது, "இதை பற்றி எதுவுமே பேச விருப்பமில்லை" என்று கூறிவிட்டார்.. இந்த தம்பதிக்கு ஒரு பெண் இருக்கிறாராம்.. அரசியலுக்காக இருவரும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்துவிட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... இவ்வளவு ரணகளம் நடந்த நிலையில், இந்த தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற ஆர்வத்தை இந்த தம்பதி ஏற்படுத்தி விட்டனர்.. பார்க்கலாம்..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications