டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் நள்ளிரவில் நில அதிர்வு !
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களான டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் நள்ளிரவு 12.50 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூமிக்கு அடியில் 190 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுக் கோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமபாத் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications