நிலநடுக்கம்: வடக்கு பீகாரிலும் பாதிப்பு... 3 பேர் பலி- தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு விரைவு
பாட்னா: நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு பீகார் பகுதிக்கு தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பீகார் - நேபாள எல்லைக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் விரைந்துள்ளார். அங்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அண்டை மாநிலமான மேற்குவங்கம், பீகாரிலும் அதிகமாக நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
பீகார் தலைநகர் பாட்னாவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேபாள -பீகார் எல்லைப்பகுதியில் நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சேத விபரம் குறித்து அறிய பீகார் பிரதமர் நிதிஷ்குமார் அமைச்சரவைக்கூட்டத்தைக்கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
பீகார் - நேபாள எல்லைப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் பீகார் விரைந்துள்ளனர். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியும் பீகாரில் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ள எல்லைப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மின்விநியோகம் நிறுத்தம்
வடக்கு பீகாரில் பாதுகாப்பு காரணத்திற்காக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தினால் வடக்கு பீகாரின் சிதமகாரி பகுதியில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு அளித்த பேட்டியில் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications