விடிந்ததுமே குலுங்கிய கட்டிடங்கள்.. கார்கில் பகுதியில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.7 ஆக பதிவு!
லடாக்: லடாக் அருகே கார்கில் பகுதியில் இன்று காலை 7.38 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்கச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் நிலநடுக்கத்தை கண்காணித்து பதிவு செய்கிறது.
அந்தவகையில் இன்று காலை லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது தேசிய நில அதிர்வு மையம். லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் இன்று காலை 7.38 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கிலுக்கு வடக்கே 401 கிலோ மீட்டர் தொலைவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமோ, உயிரிழப்போ இல்லை. இமயமலை பகுதியில் 3 இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் 18ஆம் தேதி லடாக் பகுதியில் 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜூன் 18 அன்று லடாக்கின் லே மாவட்டத்தில் இருந்து வடகிழக்கே 279 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது காலை 8.28 மணியளவில் ஏற்பட்டது.
அதற்கு முன்பாக, ஜூன் 18 அதிகாலையில், லடாக்கின் லே மாவட்டத்தில் இருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பாக, ஜூன் 17 அன்று, லடாக்கை இரவு 9.44 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications