டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
இன்று காலை 8 மணியளவில் இந்த நிலநடுக்கம் மக்களால் உணரப்பட்டது.

வடக்கே ஜம்மு காஷ்மீர் முதல் தெற்கே உத்தரப் பிரதேசம் வரை இந்த நில அதிர்வின் தாக்கத்தை மக்களால் உணர முடிந்தது.
சில நாட்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக மீண்டும் சுற்று வட்டாரங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இன்றைய நிலநடுக்கத்தின் மையப்புள்ளி தஜிகிஸ்தான் நாட்டின் கோபனிகான் பகுதி என்று கூறப்படுகிறது. 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அசைந்ததை உணர முடிந்ததாக டெல்லி மக்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications