டெல்லி வரை வந்துவிட்டது 'எபோலா' பீதி: தீவிர கண்காணிப்பில் 3 பேர்
டெல்லி: ஆட்கொல்லி எபோலா வைரஸ் பீதி டெல்லியை அடைந்துள்ளது. எபோலா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள துவாரகாவைச் சேர்ந்த 3 பேர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகாவைச் சேர்ந்த ஒருவர் ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். அவர் வந்த விமானத்தில் ஒருவருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த டெல்லிக்காரர் மற்றும் அவரது குடும்பத்தார் இருவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து தீவிர கண்காணிப்பில் உள்ள அவர்களுக்கு இதுவரை எபோலா நோயின் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எபோலா வைரஸ் தாக்கினால் அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை ஆகலாம்.
கண்காணிப்பில் உள்ள அந்த நபர் கானா தலைநகர் அக்ராவில் இருந்து எதியோபியாவில் உள்ள அடிஸ் அப்பாவுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லிக்கு வந்தார். கானா மற்றும் எதியோபியாவில் இதுவரை யாருக்கும் எபோலா வைரஸ் தாக்குதல் இல்லை.
எபோலா வைரஸ் தாக்கினால் 90 சதவீதம் மரணத்தில் முடியும். மேலும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications