கறுப்பு பணத்தை தடுக்க 700 அதிகாரிகள் நியமனம் - தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தலில் கறுப்பு பண புழக்கத்தை தடுக்க 700 பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமனம் செய்கிறது. இவர்கள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பாராளுமன்றத்துக்கும் ஆந்திரா, அருணாசல பிரதேசம் ,சிக்கிம் ,ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கும் நடக்க உள்ள தேர்தல்களில் கறுப்பு பண புழக்கத்தை அடியோடு கட்டுப்படுத்தும் விதத்தில் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் வருமான வரி நுண்ணறிவு மற்றும் புலனாய்வு நிதி புலனாய்வு பிரிவு ,வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மத்திய பொருளாதார நுண்ணறிவு கழகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு கழகம் , எல்லை பாதுகாப்பு படை , மத்திய தொழிற்பாதுகாப்பு படை , ரெயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட 10 அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக்குழு வாரம் இருமுறை தேர்தல் கமிஷன் தலைமையகத்தில் கூடி கறுப்பு பண புழக்கம் தொடர்பான புகார்களை விவாதித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க அறிக்கை அளிக்கும். இந்த நிலையில் கறுப்பு பணம் புழங்குவதற்கு வாய்ப்பு உள்ள பாராளுமன்ற , சட்டசபை தொகுதிகளையும் தேர்தல் கமிஷன் கண்டறிந்து அங்கு பார்வையாளர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் 700 அதிகாரிகளை தேர்தல் கமிஷன் நியமிக்கிறது. இந்தப் பணியில் "ஐ.ஆர்.எஸ்" என்னும் இந்திய வருவாய்ப்பணி அதிகாரிகளை தேர்தல் கமிஷன் அமர்த்துகிறது. இதற்காக 700 அதிகாரிகளின் பெயர்களை இறுதி செய்து பட்டியல் தருமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய கலால்-சுங்கவரி வாரியத்தை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த 700 பார்வையாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று கறுப்பு பணப்புழக்கத்தை தடுக்க தேர்தல் கமிஷனால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பறக்கும் படையினர் கண்காணிப்பு குழுவினர் எடுக்கிற நடவடிக்கைகளை கண்காணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்வையாளர்கள் "தேர்தல் செலவின பார்வையாளர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.
இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகையில் "அடுத்த சில நாட்களில் இந்திய வருவாய்ப்பணி அதிகாரிகள் தேர்தல் செலவின பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படுகிற தொகுதிகளில் சுற்றுப்பயணத்தை தொடங்குவார்கள்" என்றன.
இந்த பார்வையாளர்கள் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகிற மே மாதம் 16 ஆம் தேதிக்கு பின்னும் வேட்பாளர்களின் செலவின அறிக்கை இறுதி செய்கிற வரையில் தேர்தல் கமிஷனின் கீழ் செயல்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications