தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்- டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்!
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறையில் உள்ள டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
அதிமுகவின் முடக்கப்பட்ட தேர்தல் ஆணைய சின்னத்தை பெற புரோக்கர் மூலம் லஞ்சம் தர முயன்றதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினகரனுக்கு உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று 4வது முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் போலீசார் இது தொடர்பாக எந்த அதிகாரியையும் அடையாளம் காணாதது ஏன் எனக் கேட்டனர்.
இதனையடுத்து டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்பு குறித்து இது வரை விசாரணை நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தினகரனை சிறையில் வைக்க வேண்டும் என்பது தான் நோக்கமா என்றும் கேட்டுள்ளார்.
இதனால் டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா இருவருக்கும் ஜாமீன் அளிப்பதாக நீதிபதி கூறினார். இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களது பாஸ்போட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் வெளியூர் செல்லக் கூடாது என்ற நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications