தேர்தல் சின்னத்துடன் வாக்களித்த வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
வாரணாசி: வாக்குச்சாவடிக்குள் கட்சி சின்னத்துடன் நுழைந்த வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் தமது குர்தாவில் கை சின்னத்தை பொருத்தியபடியே இன்று வாக்களித்தார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

வாக்குச் சாவடிக்குள்ளேயே அஜய் ராய் தாம் போட்டியிடும் சின்னத்தை கொண்டு வந்ததது விதிமீறல் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் தெரிவித்துள்ளது. விதிமீறலே இது குறித்து கருத்து தெரிவித்த வாரணாசி தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பிரவீன்குமார், வாக்குச் சாவடிக்குள் சின்னங்களை காண்பிப்பது விதிமீறல்தான். இது குறித்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதனிடையே அஜய் ராய் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையம், வாரணாசி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி.யில் லேப் டாப் சர்ச்சை சின்னத்துடன் காங். வேட்பாளர் வாக்களித்தது விதிமீறலே - வாரணாசி தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தெளலி என்ற வாக்குச் சாவடியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் படத்துடன் கூடிய லேப் டாப் பயன்படுத்தப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications