'கொலை பேச்சு': தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதிலளிக்க ராகுல்காந்திக்கு மேலும் 3 நாள் அவகாசம்
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதிலளிக்க ராகுல்காந்திக்கு மேலும் 3 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 22ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்ற ராகுல்காந்தியின் பிரச்சாரத்துக்காக இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் சோலன் பகுதியில் மே 1ம்தேதி நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பாஜக ஆட்சிக்கு வ ந்தால் கலவரம் ஏற்பட்டு அதில் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றார். இந்த பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அதில் அடிப்படை ஆதாரம் இருப்பதாக முடிவுக்கு வந்தது.
இதையடுத்து ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்த தேர்தல் ஆணையம் மே 12ம் தேதி காலை 11 மணிக்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற காலக்கெடுவுடன் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இன்று ராகுல்காந்தி பதில் அளிக்கவில்லை. அவர் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மேலும் மூன்று நாட்கள் காலக்கெடுவை நீட்டித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications