பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் சசிகலாவிடம் வழங்கப்பட்டது
பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.
பெங்களூர்: அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் தர சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்று வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. அத்துடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் 10 எம்.பிக்கள் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலர் பதவி என்பது இல்லை. ஆகையால் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இந்த மனுவை ஏற்று சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஓபிஎஸ் அணியினரின் புகார் குறித்து வரும் 28-ந் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு பதில் தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்று வழங்கப்பட்டது. அதிமுக வழக்கறிஞர் பாபு தலைமையில் 5 பேர் சிறை அதிகாரிகள் மூலம் சசிகலாவிடம் நோட்டீஸ் தந்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications