கூடங்குளம் அணுஉலைகள்.. ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கூடங்குளத்தில் 3, 4வது அணுஉலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பது குறித்து அணுசக்தி துறை மற்றும் ரஷ்ய அதிகாரிகள் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் தொடர்பான பரிந்துரை மத்திய அமைச்சரைவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது தேர்தல் காலம் என்பதால் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி அளித்தது.
இதனால் கூடுதல் அணு உலைகளை அமைப்பது குறித்து ரஷ்யாவுடனான இம்மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications