கடன் பாக்கி: விஜய் மல்லையாவின் ரூ.1411 கோடி சொத்து முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1411 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதனால் இந்தியாவில் இருந்து தப்பி சென்று இங்கிலாந்தில் வசிக்கிறார் விஜய் மல்லையா. அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவருக்கு எதிராக பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனம் செய்யுமாறு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்ட தனிநீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவின் ரூ.1411 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக இன்று முடக்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடிபிஐ வங்கியுடன் தொடர்பான வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications