அன்னிய செலாவணி மோசடி, 420, 120 பி.. லலித் மோடி மீது புதிய பிரிவுகளில் வழக்கு
டெல்லி: லண்டனில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய அரசியலில் பரபரப்பை கிளப்பி வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை இந்தியா கொண்டு வரும் வகையில் நெருக்கடி அளிக்க அமலாக்கப் பிரிவு புதிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2009-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.425 கோடி ஊடக உரிமம் வழங்கியதில் லலித் மோடியும் மேலும் சிலரும் ரூ.125 கோடி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்படி வழக்கு ஒன்றை மத்திய அமலாக்க பிரிவு பதிவு செய்துள்ளது.
தற்போது லலித் மோடி உள்ளிட்டோர் மீது ‘பெமா' என்னும் அன்னியச்செலாவணி பராமரிப்பு சட்டப்பிரிவுகளையும் மத்திய அமலாக்க பிரிவு புதிதாக சேர்த்துள்ளது. அத்துடன் ஐ.பி.சி. 420 (மோசடி), 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளையும் அமலாக்கப் பிரிவு சேர்த்துள்ளது.
பொதுவாக பெமாவில் சிவில் வழக்காக குற்றம் சுமத்தாமல் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்ட பிரிவுடன் கூடிய அன்னியச்செலாவணி விதி மீறல்கள் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் எளிதாக வெளிநாட்டு ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது அமலாக்கப் பிரிவு. தற்போதைய நிலையில் அமலாக்கப் பிரிவு 17 குற்றச்சாட்டுகளை லலித் மோடி சுமத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications