கலைஞர் டி.வி. வழக்கு விசாரணை- தயாளு அம்மாள் ஆஜராகவில்லை: கோர்ட்டில் இ.டி அதிகாரி சாட்சியம்
டெல்லி: கலைஞர் டி.வி,க்கு ரூ200 கோடி பணம் கைமாறியது தொடர்பான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஜராகவில்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரி கமல்சிங் சாட்சியம் அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டி.வி.க்கு ரூ200 கோடியை ஸ்வான் நிறுவனம் கொடுத்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த தொடங்கிய போது அவசரம் அவசரமாக இந்த பணம் 'கடனாக' பெறப்பட்டு 'திருப்பி' கொடுக்கப்பட்டதாக கலைஞர் டி.வி. அறிவித்தது.

இந்தப் பணப்பரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கப் பிரிவும் தனியே வழக்குப் பதிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கமல்சிங் நேற்று சாட்சியம் அளிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தயாளு அம்மாளூக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கலைஞர் டிவி தொடர்பான சில ஆவணங்களையும் சம்மனில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டோம். ஆனால் அந்த ஆவணங்களை அவர் தாக்கல் செய்யவில்லை. விசாரணைக்கு தயாளு அம்மாள் ஆஜராகாதவில்லை. உடல்நிலை சரியில்லை என மகள் செல்வியிடமிருந்து கடிதம் மட்டும் வந்தது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications