ஜார்க்கண்ட் தேர்தல்: விஸ்வரூபமெடுக்கும் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவல்- அமலாக்கத்துறை விசாரணை!

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேச முஸ்லிம் சிறுமிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல் விவகாரத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்யும் நிலையில் அமலாக்கத்துறையும் களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தால் பர்கானா பகுதியில் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உண்மையை கண்டறிய ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றமும் ஒரு குழுவை அமைத்தது.

jharkhand assembly election 2024 2024

சந்தால் பர்கானா பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் வங்கதேச சிறுமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 3 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறையும் இணைந்துள்ளது.

வங்கதேச- இந்தியா எல்லையில் கம்பிவேலிகளை அறுத்து இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பெரிய கும்பல் ஒன்று இயங்கி வருவது போலீசார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அப்படி இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேச முஸ்லிம்களுக்கு இந்திய ஆதார் வழங்கி அவர்களை இந்திய குடிமக்களாக அடையாளப்படுத்திவிடுவதும் இந்த கும்பலின் வேலை. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேச முஸ்லிம்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஊடுருவல்கள் அதிகரித்துவிட்டது.

இதனை முன்வைத்துதான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார். சந்தால் பர்கானா பகுதியில் பழங்குடிகள் எண்ணிக்கையும் அவர்களது நிலமும் பறிபோகிறது; ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியையே இந்த ஊடுருவல்காரர்கள்தான் ஆக்கிரமித்துள்ளனர் என விமர்சித்திருந்தார். ஆனால் இதனை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா திட்டவட்டமாக மறுத்திருந்தது.

ஜார்க்கன்ட் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீர், ஹரியானா தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் பிரச்சனை முதன்மை விவகாரமாக மையம் கொண்டிருக்கிறது. அதாவது ஊடுருவல்கார்களை முன்வைத்து இந்த தேர்தலில் பாஜக லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத் என்ற முழக்கங்களை முன்வைக்க இருக்கிறது. இது ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+