சோனியா, ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு... மீண்டும் கையில் எடுக்கிறது அமலாக்கத் துறை!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீதான நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கை அமலாக்கத் துறை மீண்டும் கையில் எடுத்து வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. ரூ90 கோடி கடன் இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது.

இந்த கடன்களை தீர்க்க முடியாமல், அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில், சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து கடனை அடைத்தனர்.
இதற்கு பிரதிபலனாக அப்பத்திரிகைக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை இருவரும் அபகரித்துக் கொண்டனர் என்பது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி புகார்.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கின் விசாரண நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா, சுமன் துபே, ஆஸ்கார் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு டெல்லி கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு டெல்லி தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதனிடையே சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மோசடி செய்ததற்கான முகாந்திரம் இல்லாததால் அவர்கள் மீது பண மோசடி வழக்கைப் பதிவு செய்ய இயலாது என கடந்த மாதம்தான் அமலாக்கத்துறை முடிவு செய்தது. சோனியா, ராகுல் மீதான இந்த வழக்கை கைவிட அமலாக்கத் துறை முடிவெடுத்ததால் அதன் இயக்குநர் பதவியிலிருந்து ராஜன் கடோச் மத்திய அரசால் தூக்கியடிக்கப்பட்டார்.
தற்போது திடீரென இந்த வழக்கில் சோனியா, ராகுல் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்வதற்கு அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது சோனியா, ராகுலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications