சமீபகாலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட 2வது முதல்வர்!

சமீப காலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர்விட்ட இரண்டாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ...முதல்வர் உருக்கமான பேச்சு- வீடியோ

    சென்னை: சமீப காலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர்விட்ட இரண்டாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.

    பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 85 வது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

    முதல்வர் ஒருவர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தது இதுவே முதல்முறையாகும். இதைத்தொடர்ந்து அணைதிறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    முதல்வர் உருக்கம்

    முதல்வர் உருக்கம்

    அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நீரை பெறுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு உருக்கமாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

    குரல் தழுதழுத்து

    குரல் தழுதழுத்து

    தனது இறுதி மூச்சு வரை காவிரி நீரை பெற சட்டப்போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா எனக்கூறி குரல் தழுதழுத்து கண்ணீர் விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

    இரண்டாவது முதல்வர்

    இரண்டாவது முதல்வர்

    பேச முடியாத அளவுக்கு தொண்டை அடைத்து மேடையிலேயே கண்ணீர்விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சமீபத்தில் மேடையில் கண்ணீர்விட்ட இரண்டாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.

     கதறிய குமாரசாமி

    கதறிய குமாரசாமி

    அண்மையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மேடையில் கண்ணீர்விட்டு கதறினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய குமாரசாமி, மஜதவை மாநில மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து நான் முதல்வரானதால் மஜத கட்சி எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் அவ்வாறு இல்லை.

    விஷத்தை விழுங்கிவிட்டேன்

    விஷத்தை விழுங்கிவிட்டேன்

    விஷத்தை விழுங்கி அமுதத்தை தரவே முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே நினைக்கிறேன் என்று கூறி கதறினார் குமாரசாமி. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிரைப் வாட்டர் பார்சல்

    கிரைப் வாட்டர் பார்சல்

    இதைத்தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில பாஜகவினர் அழுவாதீர்கள் எனக்கூறி கிரைப் வாட்டர் அனுப்பி வைத்து கிண்டல் செய்தனர். இந்நிலையில் நம்முடைய முதல்வர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து மேடையில் கண்ணீர்விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+