தேர்தல் ஆணைய தீர்ப்புப்படி எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள்தான்- பெரும்பான்மை இல்லை!
தேர்தல் ஆணையம் இன்று அளித்த 83 பக்க தீர்ப்பில் எடப்பாடிஅணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தான் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் இல்லை என்கிறது தேர்
Recommended Video

டெல்லி: மதுசூதனன் அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இது தொடர்பான தீர்ப்பில் மதுசூதனன் - ஓபிஎஸ்- எடப்பாடி அணிக்கு மொத்தம் 111 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தெரிவித்துள்ளாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பதால் பெரும்பான்மையை இழந்துவிட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் மற்றும் சசிகலா மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் இன்று மதுசூதனன் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னம் என தீர்ப்பளித்தது.

111 எம்.எல்.ஏக்கள்தான்
இது தொடர்பான 83 பக்க தீர்ப்பில், 1877 பொதுக்குழு உறுப்பினர்கள் மதுசூதனன் அணியை ஆதரிப்பதாகவும் 111 எம்.எல்.ஏக்கள் அந்த அணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லோக்சபா எம்.பிக்கள் 34; ராஜ்யசபா எம்.பிக்கள் 8 பேரும் மதுசூதனன் அணியில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சசிகலா தரப்புக்கு 6 எம்.பிக்கள்தான் உள்ளனர் என்கிறது தேர்தல் ஆணையம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உட்பட 20 எம்.எல்.ஏக்கள்தான் சசிகலா அணியில் உள்ளனர் என்கிறது தேர்தல் ஆணையம்.

இருப்பது 111 தான்
சட்டசபையில் மொத்தம் 234 இடங்கள். சட்டசபையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு 111 எம்.எல்.ஏக்களைத்தான் கொண்டிருக்கிறது என தேர்தல் ஆணையம் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறது.

நிரூபிக்கனும்
அதாவது தற்போதைய எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை புள்ளி விவரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் பகிரங்கப்படுத்தி இருக்கிறது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விரைவில் ஆளுநர் நடவடிக்கை
இதனடிப்படையில் அனேகமாக வரும் நாட்களில் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடலாம் என்றே தெரிகிறது. அதிரடி காட்டி வரும் ஆளுநர் விரைவில் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கலாம்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications