For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய - அமெரிக்க உறவின் பிரதான தூண் ‘கல்வி’ தான்...: அமெரிக்க தூதர் நான்சி பவல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்திய அமெரிக்க உறவில் முக்கிய துணாக கல்வி விளங்குவதாகத் தெரிவித்துள்ளார் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சிபவல்.

இந்தியத் தூதர் தேவ்யானி அமெரிக்காவில் பொது இடத்தில் வைத்து கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து இந்திய - அமெரிக்க உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதம வேட்பாளர்களைச் சந்தித்து வருகிறார் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவல்.

இதற்கிடையே, கடந்த வெள்ளியன்று கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான்சி பவல், இந்திய அமெரிக்க உறவில் கல்வியின் பங்கு குறித்து உரையாற்றினார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

பரஸ்பர நன்மை....

பரஸ்பர நன்மை....

கல்வி போன்ற முக்கியமான துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை உள்ளது.

முக்கியத் தூண்....

முக்கியத் தூண்....

கல்வி எங்கள் இளம் பெண்கள் தங்களது இலக்குகளை அடைய உதவியாக உள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் கல்வி மிக முக்கிய தூணாக உள்ளது.

இந்திய மாணவர்கள்...

இந்திய மாணவர்கள்...

தற்போது ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர்.

மாணவிகள் குறைவு....

மாணவிகள் குறைவு....

இருப்பினும் இதில் வெறும் 30 சதவீத மாணவிகள் மட்டுமே அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். எனவே சர்வதேச தரத்திலான கல்வியை மேலும் பல மாணவிகள் பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்' என.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Education is one of the main pillars of bilateral relations between the United States and India, American Ambassador Nancy Powell said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X