இமயமலை பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டால் 8 லட்சம் பேர் பலியாகும் ஆபத்து!
டெல்லி: இமயமலை பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8 அலகுகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய துணைத்தலைவர் எம்.சசிதர் ரெட்டி கூறியதாவது:

நிலநடுக்க ஆய்வு
நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது. ஆயினும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையை கொண்டிருப்பதே சிறந்ததாகும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் 8 அல்லது அதற்கு மேலான ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்ற ஆய்வை தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் மேற்கொண்டது. இதில் இமயமலை பகுதி ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

53 ஆண்டுகளில்...
கடந்த 1897-ம் ஆண்டு முதல் 1950 வரையிலான 53 ஆண்டுகளில் இமயமலைத்தொடர் பகுதி நிலநடுக்கத்துக்கு அதிக வாய்ப்புகள் உண்டான பகுதியாக இருந்தது.

4 நிலநடுக்கங்கள்..
இந்த 53 ஆண்டுகளில் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவான 4 நிலநடுக்கம் குறிப்பிடத்தக்கது.

எவை எவை?
சில்லாங்கில் 1897, காங்ராவில் 1905, பீகார்-நேபாளம் எல்லையில் 1934, அசாமில் - 1950 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பலத்த இழப்பு ஏற்பட்டது.

மீண்டும் நிலநடுக்கம்..
1950-ல் இருந்து அதைப் போன்ற ஒரு நிலநடுக்கம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

காஷ்மீர் முதல் அருணாச்சல் வரை
தற்போதைய நிலையில் இமயமலைத்தொடர் பகுதிகளில் ரிக்டர் அளவில் 8 அல்லது அதற்கு மேலான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டால் காஷ்மீர் முதல் அருணாசலப் பிரதேசம் வரை 8 முதல் 9 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

1897-ஐப் போல..
1897 ஆம் ஆண்டு மேகாலயா தலைநகர் ஷில்லாங்கை மையமாகக் கொண்டு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மியான்மர் முதல் டெல்லி வரை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.

அசாமில் மட்டும் 6 லட்சம் பேர் பலியாகும் ஆபத்து
மீண்டும் 1897ஆம் ஆண்டைப் போல ஒரு நிலநடுக்கம் தற்போது ஏற்பட்டால் அசாம் மாநிலத்தில் மட்டும் 6 லட்சம் பேர் பலியாகும் அபாயம் இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஷில்லாங் நிலநடுக்கம் போல மீண்டும் ஏற்பட்டால் எப்படியான பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications