"முடியல விட்ருங்க!" கதறிய முதியவர்..சொந்த குடும்பத்தினர் அடித்தே கொன்ற கொடூரம்! பதற வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: முதியவர் ஒருவர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில் மாநிலத்தில் முதியவர் ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளது.

ஒடிசா

ஒடிசா

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியில் பட்டப்பகலில் முதியவர் ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அவரது குடும்பத்தினரே அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் குர்ஷா மணியக்கா என்ற முதியவர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரை குடும்பத்தினர் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

 என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

குர்ஷா மணியக்காவுக்கும் அவரது மகனுக்கும் எதோ ஒரு விஷயத்தில் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது குர்ஷா மணியக்கா தனது மகனின் வீட்டில் இருந்த மேற்கூரையின் ஒரு பகுதியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் விரைவிலேயே கைகலப்பாகவும் முற்றி உள்ளது.

 தாக்குதல்

தாக்குதல்

அப்போது மணியக்காவின் அண்ணன், மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சேர்ந்த அவரை தாக்கத் தொடங்கி உள்ளனர். அவரை அங்கிருந்த மின்கம்பம் ஒன்றில் கட்டிய அவர்கள், மரக் கட்டைகளைக் கொண்டு தாக்கி உள்ளனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் அந்த முதியவரை இரக்கமின்றி மாறி மாறி அடிப்பது தெளிவாகத் தெரிகிறது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

முதியவர் மின் கம்பத்தில் கட்டப்பட்டு இருந்ததால், அவரால் இந்தத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அந்த முதியவர் வலி தாங்க முடியாமல் காலை தூக்கிக் கொண்டு கதறி அழுகிறார். ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி விடுகிறார். அப்போதும் அவரை விடாத அந்த பெண் முதியவரின் தோள்பட்டையில் பலமாக அடிக்கிறார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

பின்னர், அப்பகுதி மக்கள் உதவியுடன் அவரது உடலைத் தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் ஒருவரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+