மேற்கு வங்கத்தில் மமதா கட்சியினர் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநலிம் முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர்கள் மினார் ஷேக், பஷீர் என்று தெரிய வந்துள்ளது. 3வது நபரின் அடையாளம் தெரியவில்லை.
இந்த வெடிகுணடுகளை தேர்தல் சமயத்தில் பயன்படுத்தி கலகம் விளைவிக்க பதுக்கி வைத்திருந்துள்ளனர். அப்போது தற்செயலாக ஒரு குண்டு வெடித்து விட்டது.

தேர்தல் சமயத்தில் மேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி எதிரிகளைத் தாக்குவது சர்வசகஜமாகும். அந்த வகையில் தற்போது நடைபெறப்போகும் சட்டசபைத்தேர்தல் சமயத்திலும் கலகம் விளைவிக்க பலர் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுபோன்ற பாதுகாப்பின்மை காரணமாகவே அந்த மாநிலத்தில் 6 கட்ட தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸார் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 150 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. மேலும் 150 குண்டுகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முர்ஷிதாபாத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் நிலவுகிறதாம். இரு கோஷ்டிகளுக்கு இடையில் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. தற்போது ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த குண்டுகளும் கூட இந்த கோஷ்டிகளுக்கிடையிலான மோதலின்போது பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என்று போலீஸார் கூறியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications