சட்டசபை தேர்தல் குறித்து இன்று டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை
டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளது.
அதிமுக அரசின் ஆட்சிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதே போன்று புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.

இதையடுத்து அந்த 5 மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்தப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதுயில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்கள் பெறுவது, கூட்டணியை முடிவு செய்வது என்று தேர்தல் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டன. தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கிவிட்டது.
இந்நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது.
தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதி இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்பட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications