அது ஏன் 10 மணி? உடனே தடை விதிச்சா என்ன? மேற்கு வங்க கலவரம்.. தேர்தல் ஆணையம் விளக்கம்!
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டது ஏன், நேற்றே ஏன் தடை விதிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் சார்பாக இதற்கான விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ரத யாத்திரை நடத்த சென்ற வருடம் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தடை விதித்தார். நீங்கள் எல்லாம் எங்கள் ஊருக்குள் வந்தால் கலவரம்தான் நடக்கும் என்று கூறி அவர் இந்த தடையை விதித்தார்.
ஆனால் மமதாவால் அமித் ஷாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க முடியாது. இந்த நிலையில்தான் அமித் ஷா நேற்று முதல்நாள் மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார்.

கலவரம் நடந்தது
நேற்று கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்த பேரணி செல்லும் போது பெரிய கலவரம் ஏற்பட்டது. அங்கு இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இடையே பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.

தேர்தல் பிரச்சாரம்
இதையடுத்து தற்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் முக்கியமான காரணம் ஒன்றை கூறியுள்ளது.

பதட்டமான சூழ்நிலை
அதாவது, மேற்கு வங்கத்தில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடந்தால் பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடக்கும் வகையில், தற்போது பிரச்சார கூட்டங்களுக்கு தடை விதித்து இருக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

பலர் கேள்வி
ஆனால் இது தொடர்பாக பல கேள்வி எழுந்தது. பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றால் உடனடியாக தடை விதிக்க வேண்டியது தானே. அது ஏன் இன்று இரவு வரை நேரம் கொடுத்து இருக்கிறீர்கள். இன்று நடக்கும் மோடியின் பிரச்சாரத்திற்கு எந்த தடங்கலும் வர கூடாது என்று, இப்படி செய்துள்ளீர்களா என்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.

தேர்தல் ஆணையம் பதில்
இதற்கு தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, பல்வேறு விஷயங்களை ஆராய்ந்தே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் உடனடியாக முடிந்தால் பெரிய பிரச்சனை வரும். அரசியல் கட்சிகளுக்கு கடைசியாக ஒருமுறை பிரச்சாரம் செய்ய வாய்ப்பு வழங்கவே இன்று கூடுதல் அவகாசம் வழங்கி இருக்கிறோம், இதில் வேறு அரசியல் எதுவும் இல்லை என்று, குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications