தேர்தலுக்கு நடுவே பரபரப்பு.. ஜார்கண்ட் டிஜிபி அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய தேர்தல் ஆணையம்
ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிஜிபி அனுராக் குப்தாவை அதிரடியாக நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் உள்ளார்.

ஜார்கண்ட் மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் தான் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 42 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
வெளியாகும் தேர்தல் தேதி.. ஜார்க்கண்ட்டில் கூட்டணி நிலவரம் என்ன? எந்த கட்சிக்கு எத்தனை எம்எல்ஏக்கள்?
அதேபோல் பாஜக தனித்து போட்டியிட உள்ளது. இதனால் ஜார்கண்ட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே தான் இன்று ஜார்கண்ட் மாநில டிஜிபி (பொறுப்பு) அனுராக் குப்தா அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அந்த பொறுப்பில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல்.. ஒரு வழியாக முடிஞ்சுது இழுபறி! இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
ஜார்கண்ட் பொறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தா, ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் அனுராக் குப்தா, அந்த பதவியில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜார்கண்ட் மாநில டிஜிபி பொறுப்பானது மூத்த டி.ஜி.பி. அந்தஸ்திலான வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொறுப்பு டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அனுராக் குப்தா, 1990ம் ஆண்டில் ஐபிஎஸ் பதவியில் சேர்ந்தார். இவர் தேர்தல் நேரத்தில் ஒரு பொறுப்பில் இருந்து இப்படி நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் ஒருமுறை நடந்துள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் சிறப்பு பிரிவு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications