For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டு போடுங்க: பலூன்களை பறக்கவிடும் தேர்தல் ஆணையம்

By Siva
|

பெல்லாரி: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மக்களை வாக்களிக்கத் தூண்டும் வகையில் தேர்தல் ஆணையம் பலூன் மூலம் பிரச்சாரம் செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் மே மாதம் 12ம் தேதி வரை 9 கட்டமாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் ஏப்ரல் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Election commissions balloon in Bellary skies

இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்காளர்களை வாக்களிக்குமாறு கோரி தேர்தல் ஆணையம் பெல்லாரியில் பலூன்களை பறக்கவிட்டுள்ளது.

அந்த பலூன்களில் ஏப்ரல் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்று பயமின்றி நிமிர்ந்த தலையுடன் வந்து வாக்களியுங்கள். உங்களையும், உங்களின் உரிமையையும் காப்போம் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் மாற்றி யோசித்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.

English summary
Election commission's balloon in Bellary skies have urged the voters to caste their vote without any fear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X