காதல் முறிவு.. 4வது மாடியிலிருந்து குதித்து பெங்களூர் மாணவி தற்கொலை
பெங்களூர்: பெங்களூரில் காதலன் காதலை முறித்துக் கொண்டதை தாங்க முடியாமல் பொறியியல் கல்லூரி மாணவி மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரில் உள்ள சின்னப்பனஹள்ளியைச் சேர்ந்ந்தவர் நேஹா ரெட்டி(22). நியூ ஹாரிசான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரும், மகாதேவபுராவை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவரும் காதலித்துள்ளனர்.

நேஹா விக்னேஷை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் விக்னேஷின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிய வர அவர்கள் தங்களின் மகனை கண்டித்துள்ளனர்.
காதலை விட்டுவிட்டு ஒழுங்காக படி என்று கண்டித்துள்ளனர். இதையடுத்து விக்னேஷ் நேஹாவை சந்திப்பதை, பேசுவதை நிறுத்திவிட்டார். இது குறித்து நேஹா கேட்டதற்கு காதலை முறித்துக் கொள்வதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு நேஹா விக்னேஷின் வீட்டிற்கு சென்று தனது காதலை ஏற்குமாறு கூற அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நீ இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்று நேஹா கூற அதை விக்னேஷ் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவர் விக்னேஷின் 4 அடுக்குமாடி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நேஹாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேஹாவை தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஷை கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications