For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பவே முடியலியே.. சபரிமலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ்தானா இப்படி சொல்வது!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி- சுப்ரீம்கோர்ட்- வீடியோ

    டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. பந்தளம் ராஜா குடும்பம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இடைப்பட்ட வயதில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    Entry of Women into Sabarimala: Who supports and Who opposes?

    இந்த நிலையில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதில் பலர் பல்வேறு விதமான முடிவுகளையும், நிலைப்பாடுகளையும் எடுத்து இருக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் பெண்கள் உள்ளே நுழைய கூடாது என்ற நிலைப்பாட்டை பந்தளம் ராஜா குடும்பம் எடுத்து இருக்கிறது. பந்தயத்தில்தான் ஐயப்பன் பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. இங்கும் ஒரு ஐயப்பன் கோவில் உள்ளது. அது பந்தளம் ராஜாவிற்கு சொந்தமானது ஆகும். இந்த ராஜா குடும்பம் தற்போது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய கூடாது என்று கூறியுள்ளது.

    [மதுரையில் எய்ட்ஸ் மருத்துவமனையா? எய்ம்ஸை எய்ட்ஸ் என்று கூறி அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர்!!]

    ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கம் பெண்களுக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி, கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும். சாஸ்திரங்கள் பெண்களின் உரிமையை பறிக்க கூடாது என்றுள்ளார்.

    கேரளா மாநில அரசும் பெண்கள் கோவிலுக்கு செல்ல ஆதரவு அளித்துள்ளது. கடந்த ஜூலை மாதமே மாநில அரசு தனது நிலைப்பாட்டை இதில் தெரிவித்துவிட்டது.

    English summary
    Entry of Women into Sabarimala: RSS backs women entry to Temple amidst Pandalam dynasty opposes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X