பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயாருக்கு அடி உதை.. வழக்கை வாபஸ் பெறாததால்
எடாவா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயார் வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் அடித்து உதைத்து தாக்கப்பட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் எடாவா நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. எடாவா நகரானது உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் சொந்த மாவட்டத் தலைநகராகும். இங்குதான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸில் தாயார கொடுத்த வழக்கின்பேரில் போலீஸார் சிலரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் தந்தையான பசந்த் யாத் உள்ளிட்ட ஐந்து பேர் பாதிக்கப்பட்ட பெண்ணை அணுகி புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு தாயார் மறுக்கவே அவரை சரமாரியாக அடித்து உதைத்துக் காயப்படுத்தி விட்டனர்.
தற்போது படுகாயமடைந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பேச்சு போய் விட்டதாக கூறப்படுகிறது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யாமல் உள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications