சர்ஜிக்கல் தாக்குதலை சந்தேகிப்பவர்களே பெருமையை ஏற்றுக்கொள்ளட்டும்.. மனோகர் பாரிக்கர் பதிலடி
மும்பை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த மாதம், 28ம் தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்பட எதிர்கட்சி தலைவர்கள் ராணுவ நடவடிக்கையில் பாரதிய ஜனதா அரசின் பங்கு மிகைபடுத்தப்படுகிறது என குற்றம் சாட்டி இருந்தனர்.

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என பிரதமர் மோடி கூறி இருந்தார்.இந்த நிலையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறும் போது இதன் முக்கிய பங்கு பிரதமர் மோடியையே போய்சேரும். நான் திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தல் என்ற அடிப்படையில் ஒரு பங்கை மட்டுமே கோர முடியும்.
யாரெல்லாம் சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததா என சந்தேகப்பட்டார்களோ அவர்கள் வேண்டுமானாலும் அந்த பெருமையை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், சர்ஜிக்கல் தாக்குதலின் வெற்றி, ஒவ்வொரு இந்தியனுக்கும் உரித்தானது. எந்த ஒரு அரசியல் கட்சிக்குமானது அல்ல. அது நமது ராணுவத்தால் செய்யப்பட்ட தாக்குதல். எனவே சந்தேகப்படும் நபர்களும் அதில் உரிமை கோரலாம். இவ்வாறு பாரிக்கர் தெரிவித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications