நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்.. யார் மனதையும் புண்படுத்தக் கூடாது: மம்தா பானர்ஜி பரபர பேச்சு
கொல்கத்தா: வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு என சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் கருத்துகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமாக சனாதன தர்மம் ஒழிப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தாம் பேசியது சரிதான். அதில் தவறு எதுவும் இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னதான் நடந்தாலும் நடக்கட்டும் என்றார்.
மேலும் ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றனர். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர்.
வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் எந்த ஒரு செயலிலும் நாம் ஈடுபடக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். ரிக் மற்றும் அதர்வ வேதாக்கள் அதில் இருந்து வந்தவையே என்பதை நாம் அறிவோம். எனது ஆட்சியில் பல்வேறு சமய குருக்கள் பென்ஷன் பெறுகிறார்கள். அவர்கள் மத சடங்குகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications