முன்னாள் திமுக எம்பி மஸ்தானின் வாய், மூக்கை பிடித்து மூச்சை திணறடித்து கொலை வழக்கு .. சகோதரர் கைது
செங்கல்பட்டு: முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது அவருடைய சகோதரரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர். இவருக்கு 66 வயது. இவர் அதிமுகவில் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் அவர் மாநில சிறுபான்மையினர் நலச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பழவேலி அருகே வந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சந்தேகம்
இந்த நிலையில் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மஸ்தானின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனை
மஸ்தானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் வாக்குமூலத்தின் மூலம் மஸ்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இந்த நிலையில் மஸ்தான் இறந்த தினத்தன்று வாகனம் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் மஸ்தானின் உறவினர் இம்ரான் பாஷா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணை
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தந்ததால் அவரை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் போலீஸார் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மஸ்தான் வீட்டிலிருந்து செங்கல்பட்டு சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கையும் இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களையும் போலீஸார் கண்காணித்தனர்.

தகவல்கள்
இதை வைத்து இம்ரான் பாஷா கூறிய தகவல்கள் பொய்யானவை என தெரியவந்தது. மேலும் மஸ்தான் சென்ற காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரு நபர்கள் வழியில் ஏறிக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரான் பாஷாவிடம் போலீஸார் கிடுக்கிப்படி விசாரணை மேற்கொண்டனர். இதில் தனது உறவினர் நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி மஸ்தானை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

வாக்குமூலம்
இதுகுறித்து இம்ரான் பாஷா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: டாக்டர் மஸ்தான் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருந்ததாலும் மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். பின்னர் அவரிடம் இருந்து சிறுக சிறுக ரூ 15 லட்சம் வரை கடனாக பெற்றேன். அந்த கடனை கேட்டு மஸ்தான் தொந்தரவு செய்து வந்தார், இதனால் எனது உறவினர் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தவுபீர் அகமது, லோகேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி பைனான்சியரிடம் பணம் பெற போவதாக கூறி மஸ்தானை நம்ப வைத்து காரில் அழைத்து சென்றனர்.

காரில் பின்தொடர்ந்த 2 பேர்
காரில் மஸ்தான், இம்ரான், சுல்தான், நஷீர் ஆகியோருடன் செல்லும் போது இவர்களுடைய காரை தவுபீக் அகமது மற்றும் லோகேஸ்வரன் ஆகியோர் வேறு ஒரு காரில் பின் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்று தனியாக ஒரு இடத்தில் காரை நிறுத்தினர். அப்போது காரின் பின் சீட்டில் இருந்த நஷீர், மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து பிடித்துக் கொள்ள சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகவும் அதற்கு பின்னால் காரில் வந்த தவுபீக் , லோகேஸ்வரன் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் மற்றவர்களை தப்ப விட்ட இம்ரான், மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்ததால் மற்றவர்களை ஏமாற்றியுள்ளார்.

சகோதரர் கைது
இந்த வழக்கில் இம்ரான் பாஷா, தமீம் என்கிற சுல்தான், நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் மஸ்தான்கொலை வழக்கில் அவருடைய தம்பி ஆதாம் பாஷாவை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்துள்ளனர். கொடுத்த கடனை மஸ்தான் திருப்பிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய தம்பி ஆதாம் பாஷாவும் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications