Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EXCLUSIVE: "ஜெகன் மீது தப்பு இல்லை!" “ஒன்இந்தியாவிடம்” மனம் திறந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: திருப்பதியில் வழங்கப்படும் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்திருந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்பு பேட்டியளித்துள்ள பவன் கல்யாண், இந்த விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை குறை சொல்ல முடியாது எனக் கூறியிருக்கிறார்.

அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும்.

pawan kalyan tirupati laddu andhra pradesh

லட்டு சர்ச்சை: இதற்கிடையே திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் லட்டில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் ஏழுமலையான் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆய்வக முடிவுகளையும் தெலுங்கு தேசம் கட்சியினர் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருப்பதியில் பக்தர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜெகன்மோகன் ரெட்டியை பாஜக மற்றும் தெலுங்கு தேசம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஜெகன் மோகன் ரெட்டியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். அதேநேரம் ஜெகன் மோகன் ரெட்டி இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பவன் கல்யாண்: இந்தச் சூழலில் ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இது குறித்து நமது ஒன் இந்தியா தளத்திற்குப் பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். லட்டு சர்ச்சையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை குறைகூறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதி தேவஸ்தானம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்று தெலுங்கு தேசம் அமைச்சரும் சந்திரபாபு நாயுடு மகனுமான நாரா லோகேஷ் கூறியுள்ள நிலையில், லட்டு சர்ச்சைக்கு ஜெகன் மோகன் ரெட்டியை எப்படி குற்றம் சொல்ல முடியும் என்ற பவன் கல்யாணிடம் எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "ஜெகன் மீது நாங்கள் எப்போது குற்றம் சாட்டினோம்? நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்தை தான் விமர்சிக்கிறோம். தனிப்பட்ட முறையிலும் சரி பொதுவெளியிலும் சரி நான் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிக்கவில்லை. அவரது ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேவஸ்தான உறுப்பினர்கள் குறித்துத் தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.

தேவஸ்தான உறுப்பினர்களை நியமித்தது நீங்கள் (ஜெகன் மோகன்) தான்.. ஆனால், நீங்கள் தனிப்பட்ட முறையில் இதற்கு (லட்டு சர்ச்சை) பொறுப்பேற்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சரி, எல்லாம் நடந்துவிட்டது. விசாரணை நடக்கட்டும்.. அதில் உண்மை தெரிய வரும். ஆனால், அதற்கு ஏன் நீங்கள் அச்சப்படுகிறீர்கள். இவர்களை (தேவஸ்தான உறுப்பினர்கள்) காக்க ஏன் முயல்கிறார்கள். இதுவே எனது கேள்வி. இது எளிமையானது. நேரடியானது" என்று அவர் கூறினார்.

திருப்பதி லட்டில் இதுபோன்ற கலப்படம் நடந்திருப்பதாக வெளியான செய்திகளால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தலையிட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இது குறித்த அறிக்கையைக் கேட்டுள்ள நிலையில், உணவு துறை அமைச்சகமும் இதில் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக லட்டு சர்ச்சை தொடர்ந்து, திருப்பதி கோயிலில் பரிகாரம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+