ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு... பதற்றம் - பயங்கரவாதி கைது
ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்துள்ளது. விமான நிலையத்திற்கு அருகே நார்வல் பகுதியில் வெடி பொருட்களுடன் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் நள்ளிரவில் இரண்டு முறை குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பினால் எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. விமான நிலையத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் ஜம்மு விமான நிலையத்தின் மேற்கூரை பகுதியிலும் தொழில் நுட்ப பகுதியிலும் குண்டு வெடித்த சத்தம் கேட்டது. அந்த இடத்திற்கு உடனடியாக வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். பாதுகாப்புப் படையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடித்த இடத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 5 கிலோ வெடி பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்மு காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு விமான நிலையில் குண்டு வெடித்தது பற்றியும் சேத நிலவரங்கள் பற்றியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை என்பதால் குண்டு வெடிப்பினார் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது பற்றியும் சேத மதிப்பு பற்றியும் தகவல்கள் தெரியவரவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications