பாதுகாப்பு இல்லாமல் எய்ட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப் போய் பாதிப்புக்குள்ளான கேரள டாக்டர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவின் போதிய பாதுகாப்பு எடுத்துக் கொள்ளாமல், எய்ட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்த 3 டாக்டர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட மருத்துவ குழு தற்போது சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள் மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கடந்த மாதம் 29ம் தேதி விபத்தில் காயமடைந்த ஒருவரைச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்துள்ளது. அப்போது உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், அந்நோயாளியின் காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் ஒரு மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை அளித்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக நோயாளிக்கு பயன்படுத்திய ஊசியால் மருத்துவர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்குப் பிறகு நோயாளியின் ரத்தப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்நோயாளிக்கு இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த 3 மருத்துவர்கள் உட்பட 12 மருத்துவமனை ஊழியர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊசிகள் மூலம் எய்ட்ஸ் பரவுவது என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால் அந்த நோயாளியின் உடல் நலக்குறைபாடு குறித்து டாக்டர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. மேலும், அந்த நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையும் சில நாட்கள் கழித்தே வந்ததும் குழப்பத்திற்குக் காரணம்.












Click it and Unblock the Notifications