குல்பூஷன் ஜாதவ் குடும்பத்திற்கு நிம்மதி கிடைத்துள்ளது.. சுஷ்மா ஸ்வராஜ் ஹேப்பி
குல்பூஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது, அவரதுகுடும்பத்திற்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியர் குல்பூஷன் ஜாதவின் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கும் வகையில் இந்தியாவின் வாதத்தை சரியான முறையில் சர்வதேச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த ஹரிஷ் சால்வேவிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதன்பின்னர் கடந்த 15ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய
The ICJ order has come as a great relief to the familly of Kulbhushan Jadhav and people of India.
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 18, 2017
உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் விடுத்தது.பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்று குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குல்பூஷன் யாதவ் மரணதண்டனையில் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியது.
2008ம் ஆண்டு சட்டவிதிகள்படி பாகிஸ்தான் ஆதராங்கள் போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் தூக்கு தண்டனையை ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குல்பூஷண் யாதவ் மரணதண்டனை வழக்கில் சர்வேதேச நீதிமன்றத்தில் இந்தியாவிற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
We are grateful to Mr.Harish Salve for presenting India's case so effectively before ICJ.
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 18, 2017
மேலும் குல்பூஷன் ஜாதவ் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் வாதத்தை சரியான முறையில் எடுத்து வைத்த ஹரிஷ் சால்வேவிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications