புருவம் மிஸ்ஸிங்.. அதைவிடுங்க, வீடியோ காலில் மனைவியை அப்படி பார்த்ததுமே.. பதறிய கணவர்.. அதுக்குன்னு?
கான்பூர்: என்னுடைய கணவர் ஓல்டு பேஷனாக இருக்கிறார் என்று சொல்லி, இளம்பெண் ஒருவர் போலீசுக்கு போயுள்ளார்.. என்ன நடந்தது? '
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பாட்ஷாஹி நகரை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. கடந்த 2022-ம் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. இவரது கணவர் பிரயக்ராஜை சேர்ந்தவர்.. தற்போது அந்த கணவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..
கணவர் வெளிநாட்டில் இருந்தாலும், இந்த பெண், அவரது மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார்..

கான்பூர்: இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி கான்பூரில், இவர்களின் உறவினர் திருமணம் நடந்துள்ளது.. இந்த கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக, இளம்பெண் பியூட்டி பார்லருக்கு சென்று, ஐ-ப்ரோ உட்பட அலங்காரம் செய்துகொண்டு, அதற்கு பிறகு கல்யாணத்துக்கு போயுள்ளார்..
அந்த நேரம் பார்த்து, அவரது கணவர் சவுதியிலிருந்து வீடியோ கால் செய்திருக்கிறார்.. மனைவியும் கல்யாண வீட்டிலிருந்தே, வீடியோ கால் பேசியிருக்கிறார். அப்போது, மனைவியின் புருவம் திருத்தம் செய்யப்பட்டிருப்பதை பார்த்த கணவர், கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.. ஏன் புருவத்தை ட்ரிம் செய்தாய் என்று கேட்டுள்ளார்.
புருவம் : அதற்கு இளம்பெண், "புருவத்தில் அதிகமாக முடி இருந்ததால், அழகாக தெரியவில்லை. அதனால் ட்ரிம் செய்தேன்" என்று சொல்லி உள்ளார். இதைக்கேட்ட கணவர், என்னை கேட்காமல் ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார். பிறகு கல்யாண வீடு என்றும் பார்க்காமல், வீடியோ காலை, கட் செய்துவிட்டாராம் கணவர்.

அப்போதும் ஆவேசம் அடங்காத கணவர், மறுபடியும் போனை போட்டு, மனைவியை அழைத்து, தலாக் சொல்லி உள்ளார்.. இளம்பெண் எவ்வளவோ எடுத்து சொல்லியும், காதில் வாங்காமல், 3 முறை போனிலேயே தலாக் சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அக்டோபர் 12-ம் தேதி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தார்.
புகார் அந்த புகாரில், ''என்னுடைய கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்ததால், வீடியோ கால் மூலம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்... அப்போது, நான் என் புருவங்களை திருத்தம் செய்ததை பார்த்து, மிகவும் கோபப்பட்டார். அழைப்பையும் துண்டித்துவிட்டார். பிறகு, மறுபடியும் கணவர் தன்னை அழைத்து, புருவங்களை திருத்தம் செய்வது தொடர்பாக கடுமையாக வாக்குவாதம் புரிந்தார்.
இறுதியில், மூன்று முறை தலாக் என்று உச்சரித்தார். நான் அவரிடம் பலமுறை பேச முயற்சித்தேன், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.. இந்த விவகாரத்தில் என்னுடைய மாமியார், கணவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்" என்று புகாரில் கூறியிருக்கிறார்.

விசாரணை: இந்த புகாரின்பேரில் போலீசார், கணவர் மற்றும் மாமியார் உட்பட 5 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்களாம்.. இது தொடர்பான விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது..
தன்னுடைய கணவர் சவுதிக்கு சென்றபிறகு, வரதட்சணை கேட்டு மாமியார் வீட்டில் துன்புறுத்தியதாகவும் இளம்பெண் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தன்னுடைய கணவர், "ஓல்டு பேஷனாக" இருக்கிறார் என்றும் போலீசில் முறையிட்டிருக்கிறாராம் பெண்.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications