F-35 Fighter Jets: அவமானப்படுத்திய அமெரிக்காவிடமிருந்து.. F-35 போர் விமானம் வாங்குகிறதா மத்திய அரசு? அமைச்சர் பதில்
டெல்லி: வரி விஷயத்தில் இந்தியாவை அமெரிக்கா முதுகில் குத்தியிருக்கிறது. அப்பேற்பட்ட நாட்டிடமிருந்து F-35 போர் விமானத்தை வாங்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவின. இது குறித்து காங்கிரஸ் எம்பியின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது அந்நாட்டு அதிபர் டிரம்புடன் கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இந்தியா அமெரிக்கா சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது.

அதில் எப் -35 மற்றும் கடலுக்கு அடியில் இயங்கும் ஆயுதங்கள் போன்ற மேம்பட்ட ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு கொடுப்பது குறித்து அமெரிக்கா மறு ஆய்வு செய்யும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியெனில் இந்தியாவுக்கு அதிநவீன விமானங்களும் இதர பல ஆயுதங்களும் அமெரிக்கா வழங்க முன் வந்திருக்கிறது என்று அர்த்தம்.
தற்போது வரி விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் முதுகில் குத்தியிருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை இந்தியா வாங்குமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இதே கேள்வியை காங்கிரஸ் எம்பி பல்வந்த் பஸ்வந்த் வான்கடே எழுப்பி இருந்தார். இதற்கு மத்தி வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், எழுத்தப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
நேற்று ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் வரி விஷயத்தில் அமெரிக்காவின் கோபத்தை தணிக்க இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. அதாவது இயற்கை எரிவாயு, தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தங்கம் ஆகியவை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில் மத்திய அமைச்சரின் பதில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
இந்தியா விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து தலையீடு செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டையில் நான்தான் போரை நிறுத்தினேன் என்று அமெரிக்க டிரம்ப் உரிமை கொண்டாடி வருகிறார். ஆனால் அப்படியான எதையும் மத்திய அரசு தற்போது வரை உறுதி செய்யவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அமெரிக்க தொடர்ந்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications