இன்றைய தர்ணாவில் பங்கேற்றால் கடும் விளைவுகள்... ஊழியர்களுக்கு மத்திய அரசு 'வார்னிங்'
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் இன்றைய தர்ணா போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றால் கடும் விளைவுகள் ஏற்பௌட்ம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
7வது ஊதியக் குழு அறிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அருகே இன்று தர்ணா போராட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.

ஆனால் மத்திய அரசு, இந்த தர்ணா போராட்டத்தில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு ஊழியர்களும் வியாழக்கிழமையன்று கட்டாயம் பணிக்கு வரவேண்டும். அப்படி வராத ஊழியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஊதியமும் பிடித்தம் செய்யப்படும்.
வியாழக்கிழமையன்று யாருக்கும் விடுமுறை அளிக்கக் கூடாது; அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அதிகாரம் இல்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை ஏற்கெனவே இயங்கி வரும் கூட்டு ஆலோசனைக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications