விதி வலியது!... காசிக்கு போனாலும் கருமம் தொலையாது போலயே!!

Subscribe to Oneindia Tamil

பரேலி: கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை கையில வேப்பிலையோடு ஆடிச்சாம்... அந்த கதையாக நீ வேண்டாம் உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன் என்று அத்துக்கிட்டு போன தம்பதிகள் மறுபடியும் ஃபேஸ்புக்கில் நட்பாகி நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் அப்படி ஓரு சுவாரஸ்யமான சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் பரேலியில்தான் நடந்துள்ளது

பரேலியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு சண்டை வராத நாளே இல்லை. விடிந்தது தொடங்கி இரவு வரும் வரை ஓயாத சண்டைதான். இது எதுக்கு சண்டை போட்டுக்கிட்டே ஒரே வீட்ல இருக்கணும் பேசமா பிரிஞ்சிடலாமே என்று பேசிவைத்து விவகாரத்து செய்தனர்.

Facebook: Husband and wife busy on chat with fake name

பிரிந்த பின்னர் வேறு வேறு வீட்டிற்கு சென்ற இருவரும் பிரிந்து தங்களுக்கு என ஒரு பார்ட்னரை வேறு வேறு பெயர்களில் ஃபேஸ்புக் மூலம் தேடி வந்தனர். ஃபேஸ்புக்கில் தங்களது அடையாளங்களை மாற்றி வேறு பெயரில் தகவல்களை பதிவிட்டனர். இதில் அந்த தம்பதிகளுக்கு இடையேதான் மீண்டும் நட்பு உருவானது.

முன்னாள் கணவனிடம்தான் மீண்டும் காதல் வசனம் பேசுகிறோம் என்பது தெரியாமலேயே உருகினாள் அந்த பெண். அதேபோல அந்த ஆணும் தனது முன்னாள் மனைவியிடம்தான் மீண்டும் காதலில் விழுந்துள்ளோம் என்று தெரியாமல் கண்ணே, மணியே என்று பதிவிட்டான்.

முகம் பார்க்கமலேயே காதலித்த இருவரும் ஒரு நாள் உணவு விடுதியில் சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அந்த நாளும் வந்தது.
பரேலியில் அயுப் கான் என்ற இடத்தில் சந்தித்துக் கொண்டனர். இருவரும் சந்தித்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.

ஃபேஸ்புக்கிலும் சந்தித்துக் கொண்டது வேறு யாருமில்லை, கணவன், மனைவிதான் என்பதை. இருவரும் அங்கேயே மீண்டும் சண்டையை தொடங்கினர். இதைப்பார்த்த அனைவரும் சிரித்துக்கொண்டனர். ஆனாலும் சண்டை நீண்டு கொண்டே போகவே உடனடியாக போலீசாரை அவர்கள் வரவழைத்தனர்.

இவர்களின் மீது எந்த எந்தக் குற்றச்சாட்டின் கீழ் புகார் பதிவு செய்வது என்று போலீசுக்கே தெரியவில்லை. ஆதலால், கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

இதுதான் காசிக்கு போனாலும் கருமம் தொலையாது என்பதோ? விதி வலியாதுதான்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+