போலி என்கவுன்ட்டர் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத அமித் ஷாவுக்கு சி.பி.ஐ. கோர்ட் எச்சரிக்கை!!
மும்பை: போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் நேரில் ஆஜராகததால் பாரதிய ஜனதா தலைவர் அமிஷ்தாவுக்கு சிபிஐ நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு குஜராத்தில் சொராபுதின் ஷேக் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதியும் பின்னர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களிலும் குஜராத்தின் அப்போதைய அமைச்சரும் தற்போதைய பாரதிய ஜனதாவின் தலைவருமான அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, போலி என்கவுன்ட்டர் வழக்குகள் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், அமித் ஷா, போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 38 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர். மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அமித்ஷா இதுவரை ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி உத்பத், அதிரடியாக புனே நகருக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து புதிய நீதிபதி முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே இருந்து வந்தார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய தலைவர்களை அடிக்கடி சந்தித்து பேச வேண்டி இருப்பதால் நேரில் ஆஜராக தனக்கு விலக்கு அளிக்குமாறு அமித்ஷா மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்று அப்போது நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. ஆனால் இன்றும் வழக்கம்போல் அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய அமித் ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications