2 சிஷ்யைகளை 10 நாட்களாக பலாத்காரம் செய்த 4 சாமியார்கள்.. உ.பி. ஆசிரமத்தில் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 2 சிஷ்யைகள் 4 சாமியார்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 2 சிஷ்யைகள் 4 சாமியார்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் லக்னோவில் நடந்து இருக்கிறது.
இந்த சாமியார்கள் நான்கு பேரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் 10 நாட்களாக அந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
தற்போது போலீசார் இந்த நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண்கள் தற்போது போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போலி சாமியார்கள்
லக்னோவில் இருக்கும் 'பாஸ்தி' மாவட்டத்தில் நான்கு சாமியார்கள் ஒன்றாக சேர்ந்த ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். 'பிரஜானந்த், சச்சிதானந்த், பிராச்சேநானந்த் , விசுவானந்த்' ஆகிய நான்கு சாமியார்களும் அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளனர். இங்கு நிறைய பெண்கள் சிஷ்யைகளாக பணியாற்றி வந்துள்ளனர்.

தொல்லை
இந்த ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் கடந்த 2008ம் ஆண்டு சேர்ந்துள்ளனர். சேர்ந்த புதிதில் அந்த சாமியார்கள் நான்கு பேரும் மிகவும் நன்றாகவே பழகி இருக்கிறார்கள். ஆனால் போக போக அவர்களின் செயல்பாடு மாறி இருக்கிறது. இந்த நிலையில் பாலியல் ரீதியாக கடந்த 1 வருடமாக சிறு சிறு தொல்லைகள் கொடுத்துள்ளனர்.

கூட்டாக வன்புணர்வு
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பெண்களையும் நான்கு சாமியாரும் சேர்ந்த ஆசிரம அறை ஒன்றில் அடைந்து வைத்துள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களாக இந்த சாமியார்கள் சேர்ந்து இரண்டு பெண்களையும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் மோசமாக கொடுமையும் படுத்தி இறுகின்றனர். பூட்டிய அறையை 10 நாட்களாக திறக்காமலே இருந்துள்ளனர்.

புகார்
நேற்று இரவு இந்த இரண்டு பெண்களும் கஷ்டப்பட்டு அங்கு இருந்து தப்பித்துள்ளனர். தற்போது இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அந்த நான்கு போலிச் சாமியார்களையும் தேடி வருகின்றனர். போலீசுக்கு தகவல் சென்றதும் அந்த நான்கு பேரும் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications