போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி பெங்களூருவில் மரணம்
போலி முத்திரைத்தாள்கள் அச்சடித்து பல கோடி ரூபாய் மோசடி செய்த தெல்கி பெங்களூருவில் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை: பல கோடி மதிப்புள்ள முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் நலக்குறைவால் பெங்களூருவில் இன்று மரணமடைந்தார்.
போலி முத்திரை தாள்களை தயாரித்து பல்லாயிரக்கணக்கான கோடி மோசடி செய்த வழக்கில், அப்துல் கரீம் தெல்கி (56) கடந்த 2001ம் ஆண்டு அஜ்மீர் நகரில் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தெல்கிக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் விதித்தது.

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் தெல்கி. அவருக்கு 20 வருடங்களுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் இருந்தன.
மேலும் தெல்கிக்கு, உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் இருந்ததும் தெரியவந்தது.
பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவரும், சசிகலா போன்ற விஐபிகளும், பணத்தை கொடுத்து சிறைக்குள் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்று சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சமீபத்தில் தனது புகார் கடிதத்தில் தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார். இதனால் மீண்டும் இவரது பெயர் லைம் லைட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர், விக்டோரியா அரசு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை, தெல்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியோடுதான் தெல்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். தெல்கி ஆபத்தான கட்டத்தில் இருந்தார். சில நாட்கள் முன்கூட்டியே அழைத்து வந்திருந்தால், தெல்கியை காப்பாற்றியிருக்கலாம் என வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தெல்கி இன்று உயிரிழந்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications