ஜெயலலிதா விடுதலைக்காக அரண்முலா கோவிலில் விருந்துக்கு 'புக்' செய்த ரசிகர்
திருவனந்தபுரம்: அதிமுக அபிமானி ஒருவர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி கேரளாவில் உள்ள பிரபல ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் நடக்கும் வருடாந்திர வல்லசாத்யா விருந்துக்கு முன்பதிவு செய்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அரண்முலாவில் உள்ளது பிரபல ஸ்ரீ பார்த்தசாரதி கோவில். அந்த கோவிலில் வல்லசாத்யா என்ற திருவிழா கொண்டாடப்படும். அந்த கொண்டாட்டத்தின்போது படகுப் போட்டி நடத்தப்படும். படகுப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவிலில் பிரமாண்ட விருந்து நடைபெறும். அந்த விருந்தில் பல வகை உணவு பரிமாறப்படும்.
இந்த வல்லசாத்யா விருந்து கேரளாவில் மிகவும் பிரபலம்.

ஜெயலலிதா
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள வல்லசாத்யா விருந்துக்கு ஜெயலலிதா பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி அதிமுக அபிமானியான சென்னையைச் சேர்ந்த மலையாளி ஒருவர் தான் அம்மாவின் பெயரில் வல்லசாத்யா விருந்துக்கு முன்பதிவு செய்துள்ளதாக கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்து
வல்லசாத்யா விருந்துக்கு முன்பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் ஆகும் என்று அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் பள்ளியோட சேவ சங்கத்தின் செயலாளர் ரதீஷ் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.

முதல் முறை
திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் வல்லசாத்யா விருந்து அளித்துள்ளனர். ஆனால் வெளிமாநில அரசியல் தலைவரின் பெயரில் விருந்து நடக்க உள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications