விவசாயிகள் போராட்டம்: ராகுல், ஸ்டாலின் கருத்து: "ஆணவத்தை வென்ற அறப்போராட்டம்"
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவாக பிரதமர் மோதி வெளியிட்டுள்ள அறிவிப்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.
இந்த நிலையில், ஓராண்டு கழிந்த நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து அவை திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோதி இன்று அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பான அவரது அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினர்.
- வேளாண் சட்டங்கள்: மோதியின் அறிவிப்பால் போராட்டம் திரும்பப் பெறப்படுமா?
- விவசாயிகள் போராட்டம் ஏன்? புதிய சட்டங்களில் என்ன பிரச்சனை?
குருநானக் ஜெயந்தி கொண்டாடப்புடம் வேளையில், பிரதமர் மோதியின் இந்த அறிவிப்பு பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது.
இந்த நிலையில், ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் விவசாயிகள் தங்கள் சத்தியாகிரகத்தால் ஆணவத்தை முறியடித்துள்ளனர். ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த் விவசாயிகளே" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/RahulGandhi/status/1461550273185255424
அந்த இடுகையுடன் இந்த ஆண்டு ஜனவரியில் தாம் பகிர்ந்த பழைய காணொலி ட்வீட்டை அவர் இணைத்திருந்தார். அதில், "என் வார்த்தைகளைக் குறிக்கவும், வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெறும்," என்று அவர் கூறியிருந்தார்.
https://twitter.com/mkstalin/status/1461564984576544770
https://twitter.com/mkstalin/status/1461564986786934792
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்," என்று கூறியுள்ளார்.
https://twitter.com/sherryontopp/status/1461544844925431814
பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "கருப்புச் சட்டங்களை நீக்குவது சரியான திசையின் ஒரு படி.... கிசான் மோர்ச்சாவின் சத்தியாகிரகம் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. உங்கள் தியாகம் பலன் கிடைத்துள்ளது... பஞ்சாபில் விவசாயத்தை புத்துயிர் பெறுவது மாநில அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.... பாராட்டுக்கள்," என்று கூறியுள்ளார்.
https://twitter.com/capt_amarinder/status/1461543062811774976
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு சார்பாக செயல்பட்டு வரும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்ர் சிங், " ஒவ்வொரு பஞ்சாபியின் கோரிக்கைகளுக்கும் இணங்கியதற்காக பிரதமருக்கு நன்றி. குருநானக் ஜெயந்தியின் புனித நாளில் 3 கருப்பு சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் பிரதமர் மோதியின் அறிவிப்பை விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக அழைத்து தங்களுடை ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/MamataOfficial/status/1461555107783327747
https://twitter.com/ArvindKejriwal/status/1461546452979650562
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில், "இந்த நாளில் வெளிவந்துள்ள செய்தி விவசாயிகளின் வாய்வில் கிடைத்த ஒளி போல உள்ளது. மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படுகின்றன. 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்றும் அழியாததாக இருக்கும். விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படி பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும். என் நாட்டு விவசாயிகளுக்கு நான் தலை வணங்குகிறேன்," என்று கூறியுள்ளார்.
https://twitter.com/asadowaisi/status/1461560344732528646
அகில இந்திய மஜ்லிஸ் இ-இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைஸி, "ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது ஏன் மோசமான யோசனை என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம். மத்தியில் ஆளும் கட்சி அதன் பதவிக்காலம் முழுவதும் ஜனநாயக ரீதியில் பொறுப்பேற்க வேண்டும், மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அந்த நோக்கத்திற்காக செயல்பட வேண்டும். இதற்கு உதவ பெரும் பணக்காரர்கள் முன்வரவில்லை என்பதை உச்சபட்ச தலைவர் உணர்ந்திருக்கிறார்," என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- இனவெறி சர்ச்சையால் அதிரும் இங்கிலாந்து கிரிக்கெட் - நடப்பது என்ன?
- ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன?
- கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதி
- தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
- சௌரவ் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி
- குஜராத்தில் அசைவ உணவு கடைகள் தொடர்பான சர்ச்சை: பாஜக சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications