விவசாயி தற்கொலை விவகாரத்தை திசை திருப்பி 'எபிசோடை' முடித்துவிட துடிக்கும் பா.ஜ.க.!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் நடத்திய நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிரான பேரணியிலேயே ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் தங்களுக்கான ஆயுதமாக்க முயற்சித்தன.. ஆனால் எங்கே மத்திய அரசுக்கு நெருக்கடியான நிலைமை உருவாகிவிடுமோ என அஞ்சும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களோ இந்த பிரச்சனையையே ஒட்டுமொத்த எப்படியாவது திசை திருப்பி கதையையே முடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதியும் பேசி வருகின்றனர்..

ஆனால் பா.ஜ.க. ஆதரவாளர்கள் சிலரே தற்கொலை செய்து கொண்ட விவசாயி, நட்ட ஈடு கிடைக்காத மன உளைச்சலில் இருந்தார் என்பதை ஒப்புக் கொண்டு அதில் 'சதவீத' கணக்குப் பார்க்கிற கொடுமையையும் செய்து வருகின்றனர்.. விவசாயி தற்கொலை தொடர்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் கருத்துகளின் தொகுப்பு:

  • தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார்..
  • 10 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர்...
  • பல்வேறு விவசாயிகளின் பேரணிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் அரசியலில் தலை தூக்க நினைத்தார்..
  • சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் ஈர்த்ததாக கூறி இணைந்தவர்
  • கஜேந்திரசிங்குக்கும் மூன்று மகனகளுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.. இதில் அவர் மிகவும் மோசமாக மனமுடைந்து காணப்பட்டார்.
  • கடுமையான பனிமழையால் கஜேந்திரசிங் பயிர்கள் அனைத்தும் நாசமாகிப் போயின.. இதனால் அவர் நட்ட ஈடு கோரி வந்தார்..
  • இருப்பினும் அதிகாரிகளோ 33% அளவுக்கு பயிர் சேதம் இருந்தால்தான் நட்ட ஈடு கொடுப்போம் என கூறினர்.. கஜேந்திரசிங்குக்கு 33% ஐ விட குறைவான அளவு சேதம் இருந்ததால் நட்ட ஈடு கிடைக்கவில்லை..
  • கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கூட கஜேந்திர சிங், காங்கிரஸ் கட்சி நடத்திய விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டார்...
  • இதற்கும் ஒருபடி மேலே போய் கஜேந்திர சிங் விவசாயியே கிடையாது.. அவர் பிசினஸ்மேன்... ஆம் ஆத்மி கட்சியின் தீவிர செயல்பாட்டாளர்..
  • பிசினஸ்வெப்சைட் நடத்துகிறார்... அதாவது http://Jaipurisaffe.com என்ற வெப்சைட்டை நடத்துவதே கஜேந்திரசிங்தான்...
  • இதோ பாருங்கள் கஜேந்திரசிங் ஏழையா.. அவர் காரெல்லாம் வைத்திருக்கிறாரே என்று படங்கள் விநியோகம்..
  • ஒரு சில பா.ஜ.க ஆதரவாளர்களின் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் விடிய விடிய கஜேந்திரசிங் விவசாயியே இல்லை என பெரும் போராட்டத்துடன் கருத்துகளை படங்களைப் போட்டு வருகின்றனர்..
  • இப்படித்தான் பா.ஜ.க. ஆதரவாளர்கள் திசை திருப்பி வருகின்றனர்... இருப்பினும் உரிய நட்ட ஈடு கிடைக்காத காரணத்தால்தான் கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டதை இவர்களில் சிலர் ஒப்புக் கொள்கின்றனர்...
  • நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லப்படுகிறது... இதோ ஒரு விவசாயி தலைநகரில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையிலேயே தற்கொலை செய்திருக்கிறார்... ஆனால் இந்த தற்கொலையையே திசைதிருப்பி விட பகீர பிரயத்தனம் பா.ஜ.க.வின் அரசியலை என்னவென்பது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+